சர் ஐசக் நியூட்டனிற்கும் தஞ்சை பெரியகோவிலுக்கும் உள்ள தொடர்பு என்ன?
ஐசக் நியூட்டன் புவிஈர்ப்பு விசையின் தந்தை என நாம் அனைவருமே நமது பள்ளி பருவத்தில் படித்திருப்போம், இன்றும் படித்து கொண்டிருகின்றனர். ஆனால் ஏனோ நம் முன்னோர்கள் உருவாக்கிய விஷயங்கள் எல்லாவற்றையும் ஏதோ கண்காட்சி பொருட்களாகவே வைத்துள்ளனர்.
உண்மையின் நம் முன்னோர்கள் உருவாக்கிய கட்டிடங்கள், கோவில்கள், பொருட்கள், பண்பாட்டு முறைகள் எல்லாவற்றிலுமே அறிவிலை முன்னிறுத்தி தான் செய்துள்ளனர்.
ஆனால் நமக்கு அவற்றை அறிவியலாக சொல்லித்தராமல் வெறும் சுற்றுலா தளம், கண்காட்சி பொருட்களாக சொல்லி கொடுத்து கொண்டு இருக்கின்றனர்.
சரி விஷயத்திற்கு வரலாம், ஐசக் நியூட்டனுக்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய சோழர்களுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்டால், ஆம் உண்மையில் சம்மந்தம் உள்ளது.
நியூட்டன் பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே சோழர்கள் கட்டிய கோவில் புவி ஈர்ப்பினை மையப்படுத்தி முழு கோவிலையும் கட்டியுள்ளனர். ஆம் எந்த ஒரு ஒட்டு பொருளும் கலவையும் இல்லாமல் சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகளை தாண்டியும் கம்பீரமாக உள்ளது. காரணம் அதன் மீது வைக்கப்பட்டுள்ள அதீத எடையே.
கோவிலின் மேற்கூரையில் வைக்கப்பட்ட கல்லிலிருந்து மதில் சுவர் கல்வரை அனைத்தும் அதீத எடை கொண்டு ஒன்றை ஒன்றை தாங்கி பிடித்து புவியீர்ப்பின் காரணமாக 1000 ஆண்டுகளுக்கு மேல் கீழ் நோக்கி அஸ்திவாரம் போட்டு நிற்கின்றது.
இனியும் நம் முன்னோர்கள் நமக்காக விட்டு சென்ற எதையும் கண்காட்சி பொருளாக எடுத்து கொள்ள வேண்டாம். அறிவியலாக பாருங்கள் உண்மை வெளிப்படும்.

No comments