சிட்டுகுருவிங்களாம் எங்க போச்சுதுனு தெரியுமா?


சிட்டுகுருவி - அழிவதற்கான காரணங்கள்:
                        
சிட்டுகுருவி அழிவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் பெரும்பான்மையான காரணங்கள்:                  
  1.   வருடம் மூன்று முறை முட்டை விட்டாலும் எல்லா முட்டைகளும் பொரிப்பதில்லை. 
  2. அப்படி முட்டை இட்டு குஞ்சு வெளி வந்தாலும் காகம் அதனை சும்மா விடுவதில்லை. குஞ்சுகளை தூக்கிச் சென்றுவிடும்.
  3. சரி, காகத்திடம் தப்பித்து விட்டது என்றால், தாய்க்குருவி கொண்டு வரும் உணவு பொருளை சாப்பிடும் பொது அதில் உள்ள நச்சுப் பொருளால் பாதிக்கப்படும். நாம் பயிர்களுக்கு அடிக்கும் பூச்சி கொல்லி மருந்துகள் சிட்டுக்களை பாதிக்கும்.
  4. மேலும், தானியத்தில் தான் நச்சு என்றால், புழு பூச்சிகளை சாப்பிட்டு வாழலாம் என்று நினைத்தால், கார் போன்ற வாகனங்களில் இருந்து வெளியேறும் மெத்தைல் நைட்ரேட் என்னும் நச்சு வாயுவால் காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் புழு , பூச்சிகளை அளிக்கின்றன.
  5. இது போதாக்குறைக்கு கிராமங்களிலேயே , வெளிக்காற்று வீட்டிற்குள் வராதாபடி, வீடு முழுவதும் குளிர் சாதனங்களை பயன்படுத்தி குருவிகளை கூடுகட்டி குடியிருக்க இயலாமல் உள்ளது.
  6. ஓகே, ரைட், இதையெல்லாம் கடந்து வாழும் குருவிகளுக்கு சம்பட்டி அடி அடிக்கிறது, செல்போன் கதிர் வீச்சுகள். இதுதான் குருவியை மலடி ஆக்கிறது என்றால் பார்த்துகொள்ளுகளேன்.
  7. நீங்கள் ஒவ்வொரு முறை செல்போனில் பேசும் போது சிட்டுக்குருவிகளை அழிக்கின்றீர்கள். 


சிட்டுகுருவி- அழிவதை எவ்வாறு தடுக்கலாம்?
  1.  சிட்டுகுருவி அழிவதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் ஓரளவு அதை நாம் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
  2. நவீன முறையில் வீடு கட்டுகிறேன் என்று சிட்டுக்குருவிகள் கூடு கட்ட கூட இடம் இல்லாத வகையில் வீடு கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
  3. தற்போது சிட்டுகுருவி வாழும் இடங்களுக்கு அருகில், அதாவது இரண்டு கிலோ மீட்டர் அளவிற்கு செல்போன் டவர்கள் நிறுவக்கூடாது.
  4. பயிர்களுக்கு இயற்கை விவசாய முறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும், பாலிதீன் பைகளில் தானியங்களை அடைத்து விற்பதுவை தடை செய்ய வேண்டும்.
  5. முடிந்த வரை எரிவாயு வாகனங்களை சிட்டுகுருவி வாழும் இடங்களுக்கு அருகில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  6. வீட்டின் ஒரு பகுதியில் சிட்டுகுருவிகளுக்கு ஒரு கிண்ணத்தில் தானியங்களயும் தண்ணீரையும் வைக்கலாம்.
  7. சிட்டுகுருவி முட்டையியோ , குஞ்சுகளையோ, கூட்டையோ சேதபடுத்த கூடாது.


No comments

Powered by Blogger.