விமானத்தின் இருக்கைகள் எல்லாம் நீல நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா?
உலகின் எந்த நிறுவனத்தின் விமானமாக இருந்தாலும் விமான இருகைகள் எல்லாம் நீல நிறத்தில் இருப்பதை காணலாம். இதன் காரணம் பயணிகளின் மனோநிலை விமானத்தில் பயணிக்கும் போது ஒரு வித பயத்தை உண்டாக்கும். இது இதய துடிப்பை அதிகரித்தும் உடலினுள் பதட்டமான சூழ்நிலையை உண்டாக்கும். ஆனால் நம் மூளையை ஏமாற்றுவதன் மூலம் இது போன்ற பதட்டமான சூழ்நிலையில் இருந்து தப்பிக்கலாம்.
ஆம் நம் கண்கள் தான் மூளைக்கு பெரும்பாலும் சுற்று சூழலில் இருக்கும் காட்சிகளை உணர்த்தி நம் உடல் நடந்து கொள்ள வேண்டிய முறையை உணர்த்துகிறது. அதை உணர்ந்து தான் பொறியாளர்கள் பயணிப்பவர்களின் மனோநிலையை சரி செ ய்ய விமானத்தினுள் நீல நிறத்தினை பளிச்சென்று தெரியும் அளவிற்கு வைத்துள்ளனர்.
பெரும்பாலும் நீல நிறத்தினை கண்டால் நம் மனம் அமைதியான சூழ்நிலையை உண்டாக்கும் என்று உளவியல் வல்லுநர்கள் ஓர் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். எனவே தான் விமான நிறுவனங்கள் இருக்கைகள் முழுவதிற்கும் பெரும்பாலான நீல நிறத்தினை கொடுத்துள்ளனர்.



No comments