பிசாசு உணவகம் பற்றி தெரியுமா?
ஸ்பெயின் நாட்டிலுள்ள எல் டையப்லோ என்ற உணவகம் தான் பிசாசு உணவகம் என பெயர் கொண்டுள்ளது. ஸ்பெயின் மொழியில் டையப்லோ என்றால் பிசாசு என்று பொருள். அதுமட்டும் காரணம் இல்லை இந்த உணவகம் அமைந்துள்ள இடம் தான் இதற்க்கு முக்கிய காரணம், இது ஸ்பெயின் நாட்டின் லாஸ் பால்மஸ் என்ற இடத்தில் உள்ளது.
இந்த இடம் எரிமலை துளைகளை கொண்ட பகுதிகளாகும், தொடர்ந்து அந்த துளைகள் வழியே வோல்க்கானோ நெருப்பு அனல் வீசிக்கொண்டே இருக்கும், இதன் வெப்பநிலை 400 - 500 டிகிரி செல்ஸியஸ் இருக்கும். இறைச்சி, மீன் மற்றும் வித விதமான ஸ்பெயின் நாட்டின் உணவுகளை எரிமலை குழம்பின் அனலின் மூலம் சமைத்து தருவார்கள்.









No comments