3,6,9 என்ற எண்ணிற்க்கு பின்னல் ஒளிந்திருக்கும் அதிசயங்கள் - நிகோலஸ் டெஸ்டலா
3,6,9 அப்படி என்ன பெரிய அதிசயம் ஒளிந்திருக்க போகிறது. அதுவும் எண்கள் தானே என்று நினைத்தால் நாம் நிச்சயம் சாதாரண மனிதர்களே. அந்த எண்ணிற்கு பின்னல் ஒளிந்திருக்கும் மகத்துவத்தையும் அறிவியலையும் கண்டறிந்து தனது வாழ்நாள் முழுதும் அதன்படியே வாழ்ந்தவர் நிக்கோலஸ் டெஸ்டலா. ஆம் நிக்கோலஸ் டெஸ்டலாவை அறிந்துகொள்ளாமல் இந்த எண்களை நம்மால் விவரிக்கமுடியாது. நிக்கோலஸ் டெஸ்லா ஒரு மிகப்பெரிய அறிவியல் விஞ்யானி. இன்று நாம் பயன்படுத்தும் அதிநவீன தொழில் நுட்பத்திற்க்கு வித்திட்ட அறிவியலின் தந்தை என்றும் கூறலாம்.
இவரை பற்றி மற்றோரு பதிவில் தெளிவாக பார்க்கலாம், இப்போது நான் மீண்டும் உங்கள் ஆச்சர்யகுறிக்கு பதில் சொல்ல வருகிறேன். டெஸ்லா தனது வாழ்நாள் முழுதும் விசித்திரமான முறையில் இந்த எண்களை பயன்படுத்தினார் என்றே கூறலாம். அதில் சில டெஸ்லா தான் தங்கி இருந்த விடுதிக்குள் நுழையும் முன்னர் வெளியே 3 முறை அங்கும் இங்கும் நடந்துவிட்டு பின்னர்தான் உள்ளே செல்வாராம். தான் தேர்ந்தெடுக்கும் அறையின் எண் கூட 3 ஆள் வகுபடும் எண்ணைக்கொண்ட அறையை தான் தேர்ந்தெடுப்பார்.

No comments